'ஓரணியில் தமிழ்நாடு' முகாம்: கூவி, கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க. - அண்ணாமலை விமர்சனம்
வருகிற தேர்தல், சட்டம்-ஒழுங்கை மையப்படுத்தும் தேர்தலாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்;
திருப்பூர்,
திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது,
கர்மவீரர் காமராஜர் குறித்து பல்வேறு விதமாக அவதூறு பேசியவர்கள் தி.மு.க.வினர். இந்த பிரச்சினை இன்று பெரிதாகி மக்கள் கோபமடைந்தவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் எதுவும் பேசவில்லை.
'ஓரணியில் தமிழ்நாடு' முகாமில் இணைந்தால் மட்டுமே ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று பகிரங்கமாக தெரிவித்து வலுக்கட்டாயமாக மக்களை கட்சியில் தி.மு.க.வினர் சேர்த்து வருகின்றனர். மாம்பழம் விற்பது போல கூவி, கூவி ஆட்களை அவர்கள் சேர்க்கின்றனர். வருகிற தேர்தல், சட்டம்-ஒழுங்கை மையப்படுத்தும் தேர்தலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.