கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் இன்று காலமானார்.;

Update:2025-07-19 09:16 IST


Live Updates
2025-07-19 11:35 GMT

மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு மு.க.முத்து உடல் கொண்டு செல்லப்படுகிறது.

2025-07-19 08:51 GMT

மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி அஞ்சலி

மு.க.முத்து உடலுக்கு அவரது சகோதரர் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

2025-07-19 07:13 GMT

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மு.க. முத்துவின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர் மு.க. முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

2025-07-19 06:08 GMT

மு.க. முத்துவின் உடலுக்கு இன்று மாலை 5 மணியளவில் இறுதி சடங்குகள் நடத்தப்படும்.

2025-07-19 05:47 GMT

மு.க. முத்துவின் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

2025-07-19 05:27 GMT

என் வளர்ச்சியை தன் வளர்ச்சியாக கருதி என்னை ஊக்கப்படுத்தியவர் என மு.க. முத்து மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

2025-07-19 04:58 GMT

மு.க. முத்துவின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2025-07-19 04:56 GMT

மு.க. முத்துவின் தாயார் பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார்.

2025-07-19 04:54 GMT

மு.க. முத்து உடலுக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

2025-07-19 04:52 GMT

மு.க. முத்து மறைவை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்