மேலும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.;

Update:2025-07-19 09:55 IST

சென்னை,

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது. அந்த வகையில், கடந்த மாதம் 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கும், ஒரு சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,110-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.125-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

19.07.2025 ஒரு சவரன் ரூ. 73,360 (இன்று)

18.07.2025 ஒரு சவரன் ரூ. 72,880 (நேற்று)

17.07.2025 ஒரு சவரன் ரூ. 72,840

16.07.2025 ஒரு சவரன் ரூ. 72,800

15.07.2025 ஒரு சவரன் ரூ. 73,160

Tags:    

மேலும் செய்திகள்