'பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க'.. மெசேஜ் அனுப்பி விட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு

மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-07-19 10:28 IST

ஆவடி,

ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவரது தந்தை இறந்து விட்ட நிலையில் மாணவி தனது தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார். மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து எதிர்ப்புகள் எழுந்ததால் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில தினங்களாக பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்கா செல்போனை எடுத்து காதலனுக்கு போன் செய்துள்ளார்.

ஆனால் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து இன்ஸ்டாகிராம் தனது ஐ.டி.யில் இருந்து "அம்மாவை நல்லா பாத்துக்கோ, எனக்கு இருக்கவே பிடிக்கல, செத்துவிடலாம் என்று தோணுது, பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க" போன்ற வாசகங்களை அக்காவிற்கு அனுப்பி விட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மாணவி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்