உதகை: 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக அறிவிப்பு

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.;

Update:2025-07-19 10:57 IST


தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 19) முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர். திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக உதகை அருகே உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு மற்றும் 8வது மையில் டீ பார்க் ஆகிய 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்