சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
சேலம்,
பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-கச்சுகுடா (ஹைதரபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-16354) இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்பட உள்ளது. இதேபோல், கச்சுகுடா-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16353) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நிரந்தரமாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12243) வருகிற 21-ந் தேதி முதல் நிரந்தரமாக ஒரு ஏ.சி. சேர் பெட்டி இணைக்கப்படும். அதேபோல் கோவை-சென்னை சென்டிரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12244) வருகிற 21-ந் தேதி முதல் நிரந்தரமாக ஒரு.ஏ.சி.சேர் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கோவை உதய் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22665) வருகிற 21-ந் தேதி முதல் நிரந்தரமாக ஒரு ஏர் கண்டிசனிங் டபுள் டெக்கர் பெட்டியும், மறுமார்க்கத்தில் இயக்கப்படும் கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு உதய் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22666) வருகிற 22-ந் தேதி முதல் ஒரு ஏர் கண்டிசனிங் டபுள் டெக்கர் பெட்டி இணைக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.