நீலகிரி: சாலையில் உலா வந்த சிறுத்தைகள், கருஞ்சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update:2025-07-19 03:49 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள பெரியார் நகர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில் 2 சிறுத்தைகளுடன் கருஞ்சிறுத்தை ஒன்று என மொத்தம் 3 சிறுத்தைகள் நீண்ட தூரம் சாலையிலேயே நடந்து சென்றன. பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.

இதைத்தொடர்ந்து அதே தினம் இரவு 8.30 மணிக்கு அதே சாலையில் 3 சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து சென்றன. இதேபோல நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சிறுத்தைகள் அப்பகுதியில் உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் தொடர்ந்து உலா வரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்