விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார் எடப்பாடி பழனிசாமி

விவசாய நிலத்தில் இறங்கி அங்குள்ள விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.;

Update:2025-07-18 19:47 IST

திருவாரூர், 

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அவருடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 4 நாள் சுற்றுப்பயணமாகத் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்திற்கு இன்று (18.07.2025) எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வழியில் திருவாரூர் மாவட்ட எல்லையான நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி என்ற பகுதியில் விவசாய நிலத்தில் அவர் இறங்கி அங்குள்ள விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

அப்பொழுது விவசாயிகளுடன் வயலில் என்ன சாகுபடியில் செய்து வருகிறீர்கள், அவர்களுக்கு என்னென்ன தேவைகள் குறித்தும், அரசின் சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் தேவை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் மானிய திட்டத்தில் வழங்கப்படும் எனவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து கொல்லுமாங்குடியில் எடப்பாடி பழனிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி நன்னிலம் மற்றும் திருவாரூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்