திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் ஆசாமி தூக்கி சென்றார்.;

Update:2025-07-18 18:42 IST

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ந்தேதி மதியம் பள்ளி முடிந்து சிறுமி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமி தனியாக செல்வதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, பின்தொடர்ந்து சென்றார்.

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் திடீரென அந்த ஆசாமி, சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்றார். பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 8 நாட்களாகியும் இதுவரை குற்றாவாளியை கைது செய்யவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினர் ஒவ்வொரு நாள் வரும்போதும் 2 நாட்கள் கால அவகாசம் கேட்பதாக குற்றம் சாட்டினர்.

செல்போன் தொலைந்தால் கூட உடனடியாக கைது செய்யும் காவல் துறையினர், சம்பவம் நடந்து 8 நாட்களாகியும் இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். மேலும் உடனடியாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும் கைது நடவடிக்கை காலதாமதமானால் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்