தமிழக காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் - அண்ணாமலை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாரி மட்டும்தான் சொல்வார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.;

Update:2025-07-18 16:32 IST

திருப்பூர்,

திருவள்ளூர் சிறுமி ( வயது 10) பாலியல் வன்கொடுமை தொடர்பாக திருப்பூரில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் துயரமானது. 7 நாட்களாக குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் இருக்கின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி இருக்காது.

இந்த சம்பவம் குறித்து இதுவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசவில்லை. முதல்-அமைச்சர் சாரி மட்டும் தான் சொல்வார். தமிழக காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். மக்களை வலுகட்டாயமாக தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். தி.மு.க., உறுப்பினராக சேர வேண்டும். இதன் அடிப்படையில் தான் தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா செய்வோம். இப்படியா இரண்டரை கோடி பேரை சேர்ப்பார்கள். இது வெட்கக்கேடு.

4 வருடங்கள் ஆன பிறகு, 5வது வருடத்தில் ஒரு கட்சி, 5முறை ஆட்சியில் இருந்து, 6வது முறையாக ஆட்சியில் இருக்கும் கட்சி கூவி, கூவி மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்த்து கொண்டு இருக்கிறார்கள். இதிலே அவர்கள் நிச்சயமாக தோற்கப்போகிறார்கள் என்பது தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெற போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்