நெல்லை- சிமோகா சிறப்பு ரெயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

நேற்று இரவு இந்த ரெயிலுக்கு கல்லிடைக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;

Update:2025-08-18 06:42 IST

நெல்லை,

நெல்லை -சிமோகா இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த ரெயில் நேற்று மாலை 4.20 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து புறப்பட்டு சென்றது. தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, கடையநல்லூர், சங்கரன்கோவில், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக சிமோகா டவுன் நிலையத்துக்கு இன்று (திங்கட்கிழமை) மதியம் 1 மணிக்கு சென்றடைகிறது.

நேற்று இரவு இந்த ரெயிலுக்கு கல்லிடைக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.20 மணிக்கு சிமோகாவில் இருந்து புறப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு தென்காசிக்கும், 10.45 மணிக்கு நெல்லை சந்திப்புக்கும் வருகிறது.

இந்த ரெயிலுக்கு நேற்று பயணிகள் அதிகளவு முன்பதிவு செய்து பயணம் செய்தார்கள். எனவே இந்த சிறப்பு ரெயிலை நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்