சி.பி. இராதாகிருஷ்ணன் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் - ஜி.கே.வாசன்
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை வேட்பாளராக அறிவித்த N.D.A கூட்டணிக்கு த.மா.கா சார்பில் நன்றி, வாழ்த்துக்கள். இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளது வரவேற்கதக்கது, மகிழ்ச்சிக்குரியது.
சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் கடின உழைப்பாளி, உயர்ந்த பண்பாளர், கொடுத்த பொறுப்பை அர்பணிப்போடும், ஈடுப்பாட்டோடும் செய்து முடிப்பவர். மஹாராஷ்டிரா ஆளுநராக அம்மாநில வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியவர்.
இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததற்கு தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகவும், நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன். சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்தலில் வெற்றிபெற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.