துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு: முத்தரசன் கோரிக்கை

பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என முத்தரசன் தெரிவித்துள்ளார்;

Update:2025-08-14 16:38 IST

சென்னை ,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

துப்புரவு தொழிலாளர்களுக்கு பல நலத்திட்டங்களை முன்வைத்து நிதித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. துப்புரவு திருவிழாவிற்கு பல சமூகப் பாதுகாப்பு திட்டங்களை தனது செலவில் மேற்கொள்ள அரசு முன் வந்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் தமக்கான வேலைப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிப் போராடுகிறார்கள்.தொழிலாளர் என்ற தகுதி வழங்கப்பட்டால், மேற்கண்ட பாதுகாப்புகள் அனைத்தும் அவர்களுக்குக் கிடைத்துவிடும். தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைப்பதாலேயே, பிரச்சனை எழுந்துள்ளது.

குப்பைகள் நிரந்தரமானவையாக இருக்கும்போது, தொழிலாளர்கள் தற்காலிகமானவர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதைக் கருத்தில் கொண்டால், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காத்திராமல் அரசே இப்பிரச்சனையைப் பேசித் தீர்க்க இயலும்.

பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல், போராடும் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுக்கு வரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்