கிருஷ்ணகிரி: பட்டப்பகலில் ஸ்கூட்டி திருட்டு - வீடியோ காட்சி
இது குறித்த காட்சிகள் அங்குள்ள கடை ஒன்றில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தாளாப்பள்ளியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முனிராஜ் என்பவர், தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள கடை முன்பு நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அந்த ஸ்கூட்டியை நோட்டமிட்டனர். ஸ்கூட்டியின் உரிமையாளர் அருகில் இல்லை என அறிந்து ஒருவர் ஸ்கூட்டியை அங்கிருந்து எடுத்தார். இதனிடையே மற்றொரு இளைஞர் தனது பைக் மூலம் ஸ்கூட்டியை டோ செய்து அங்கிருந்து லாவகமாக திருடிச்சென்றனர்.
இது குறித்த காட்சிகள் அங்குள்ள கடை ஒன்றில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்கூட்டியை திருடிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.