சுதந்திர தினம்: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை நாளை (15-08-2025) பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.