சுதந்திர தினம்: மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.;
சென்னை,
சென்னை புறநகர் பகுதிகளில் தினமும், 450க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைத்து இயக்கப்படும். அந்த வகையில், நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி என, அனைத்து மின்சார ரெயில் தடத்திலும், ஞாயிறு கால அட்டவணைப்படி, மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.