நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை அதிரடியாக குறைப்பு
கறிக்கோழி கிலோ ரூ.106-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.;
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.106-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.