தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் பெண் சாவு

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் ஒரு பைக்கில் செட்டிக்குறிச்சி அருகே சென்றபோது அந்த சாலையில் எதிரே வந்த ஒரு பைக்குடன் மோதி விபத்து ஏற்பட்டது.;

Update:2025-07-23 16:19 IST

தென்காசி மாவட்டம், சாயமலை சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 56). இவர்கள் நேற்று முன்தினம் காலையில் கட்டாலங்குளம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு மோட்டார் பைக்கில் சென்றனர். அந்த நிகழ்ச்சி முடிந்து மாலையில் மீண்டும் கட்டாலங்குளத்தில் இருந்து சிதம்பரபுரத்திற்கு மோட்டார் பைக்கில் 2 பேரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

செட்டிகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வடக்கு கோனார்கோட்டை கிராமத்திலிருந்து செட்டிகுறிச்சியை நோக்கி குற்றாலிங்கம் என்பவர் மற்றொரு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 3 பேரும் மோட்டார் பைக்குகளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதில் 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு மற்ற 2 பேருக்கும் லேசான காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமைடந்த வள்ளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த வள்ளியம்மாளுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்