திருநெல்வேலியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற கூட்டத்தில் மனுதாரர்களின் புகார் மீது விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.;
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற கூட்டம் தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. இந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் ஏற்கெனவே புகார் கொடுத்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர். மனுதாரர்களின் புகார் மீது விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின் தலைவராக திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் மன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் தவசிராஜன், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, உதவி செயற்பொறியாளர் (மக்கள் தொடர்பு அலுவலர்) சங்கர், உதவி மின் பொறியாளர் ஜெபஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.