பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 87வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமதாசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.