பலமுறை கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
குழந்தை இல்லாமல் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்வதாக இளம்பெண்ணிடம் கள்ளக்காதலன் கூறியதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்தது.;
சிங்காநல்லூர்,
கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (30). இவர்களுக்கு 4 வயதில் அபர்ணாஸ்ரீ என்ற குழந்தை இருந்தது. தமிழ்ச்செல்வி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை அபர்ணாஸ்ரீ திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தாள். உடனே தமிழ்ச்செல்வி தனது மகளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைஅறிந்த தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் குழந்தையை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாகவும், தமிழ்ச்செல்விதான் குழந்தையை கொன்று இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் உறவினர்கள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உடனே போலீசார் தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தமிழ்ச்செல்வியை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில், தமிழ்ச்செல்வி தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "தமிழ்ச்செல்வி ஒரு வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கட்டிட வேலைக்கு சென்ற போது அவருக்கு தன்னுடன் வேலை செய்யும் 35 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர் பலமுறை அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். இதுகுறித்து அந்த வாலிபரிடம் கேட்டபோது, தாராளமாக நாம் சேர்ந்து வாழலாம். ஆனால் உனது குழந்தையை அழைத்து வரக்கூடாது. குழந்தை இல்லாமல் நீ மட்டும் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
இதனால் தனது குழந்தையை விட கள்ளக்காதலன்தான் தமிழ்ச்செல்விக்கு முக்கியமாக தோன்றியது. எனவே அவர் தனது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று குழந்தை விளையாடிவிட்டு வீட்டுக்கு சென்றது. உடனே அவர் தனது குழந்தையின் கழுத்தை நெரித்தார். இதில் அந்த குழந்தை உயிரிழந்தது.
உடனே அவர் குழந்தை மயங்கி விட்டதாக உறவினர்களிடம் நாடகம் ஆடி உள்ளார். விசாரணையில் அவர் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தது உறுதியாகி உள்ளது. இந்த கொலையில் அவருடைய கள்ளக்காதலனுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளையும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தார். அவருக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.