தூத்துக்குடியில் நாளை நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்
நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாமானது நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் பஜாரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் நடைபெறுகிறது.;
தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெறி நோய் பரவலை தடுக்க நாய்களுக்கான இலவச ரேபிஸ் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாய் வளர்ப்பவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த முகாமானது நாளை (24.7.2025, வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் பஜாரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.