செல்போன் பார்த்ததை கண்டித்த தாய்: 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-07-24 02:59 IST

தேனி மாவட்டம் காமயகவுண்டம்பட்டி, கருமாரிபுரத்தை சேர்ந்தவர் சங்கிலி (56 வயது). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர், தனது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், 2-வது மகள் மதுமிதா (14 வயது). இவர், ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மதுமிதா, படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அவரது தாய், செல்போன் பார்ப்பதை நிறுத்திவிட்டு படிக்குமாறு கண்டித்தார். இதனால் மனமுடைந்த மதுமிதா தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, நள்ளிரவில் பெற்றோர் தூங்கியதும், வீட்டின் ஒரு அறையில் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்