தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு

தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் பிளக்கை பொருத்தும் போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்தார்.;

Update:2025-07-23 16:01 IST

தூத்துக்குடி, நந்தகோபாலபுரம், கிழக்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பேச்சியம்மாள் (வயது 84). இவர் தனது மகனுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் முன் பகுதியில் உள்ள சுவிட்ச் போர்டில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் பிளக்கை பொருத்தும் போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்