சிவகங்கை: குப்பை கிடங்கிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் - மக்கள் அவதி

அப்பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் தீ கிடுகிடுவென பரவத்தொடங்கியது.;

Update:2025-07-23 15:48 IST

சிவகங்கை ,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாநகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சிக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தாயமங்கலத்தில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வைப்பது வழக்கம். இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் இந்த குப்பை கிடங்கிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் தீ கிடுகிடுவென பரவத்தொடங்கியது.

இதனையடுத்து தகவலறிந்த மானாமதுரை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த குப்பை கிடங்கிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் வெளியான அதிகப்படியான புகை காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்