31ம்தேதி வரை நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் நியமன உறுப்பினர் பதவிக்கு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் ஜூலை 31ம்தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-23 16:10 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1998) தமிழ்நாடு சட்டம் 30/2025-60T மூலம் திருத்தப்பட்டவாறான பிரிவு 37(1) (I a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு 1.7.2025 முதல் 17.7.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இதனிடையே மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்தும் தொடர்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளை (17.7.2025) நீட்டித்து வழங்கும்படி வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து 31.7.2025 வரை கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின் படி தொடர்புடைய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் 31.7.2025 அன்று மாலை 3 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்