சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டம்: என்னென்ன பொருள்கள் குறித்து விவாதம்..?
என்னென்ன பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.;
சென்னை,
நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் 15-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் என்னென்ன பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி கிராம ஊராட்சி நிதி-செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை, கலைஞரின் கனவு இல்ல பயனாளிகளின் பட்டியல், முதல்-அமைச்சரின் ஊரக வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம் விவரம் மற்றும் பயனாளிகள் அறிவித்தல், சிறுபாசன-ஏரிகள் புதுப்பித்தல் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி அறிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் பணிகள் குறித்த அறிக்கை, கிராம புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம், கிராமப்புற பண்ணை மற்றும் பண்ணை சாராத வாழ்வாதார நடவடிக்கை குறித்து விவாதித்தல், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டங்கள் குறித்து விளக்குதல், தூய்மையான குடிநீர் வினியோகம் உறுதி செய்தல், மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.