கவர்னர் தேநீர் விருந்து: விடுதலை சிறுத்தைகள் புறக்கணிப்பு
நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.;
நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கூறுகையில், வழக்கம்போல் கவர்னர் ஆர்.என்.ரவி சுதந்திரதின விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கம்போல் அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.