அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி

இது சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும், எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-13 15:52 IST

திருப்பத்தூர்,

தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்த நிலையில் இன்று திருப்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு உட்கட்சி விவகாரத்தை நீங்கள் கேட்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி ஆவேசம் அடைந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“ஒவ்வொறு கட்சிக்கும் கட்டுபாடுகள் உண்டு. அதன் அடிப்படையில் தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதனை வெளியில் பேசுவது சரியாக இருக்காது. இது சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும், எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த கட்சிக்கு செல்லக்கூடாது அந்த கட்சிக்கு செல்லக்கூடாது என யாரும் தடுக்க முடியாது.

அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் கட்சியில் சேர்ந்தார் மறுபடியும் சென்றுவிட்டார். அதைபோல மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இணைந்து சென்றுவிட்டார். இப்படி பட்டவர்கள் எந்த கட்சியில் நிலையாக நிற்கமாட்டார்கள்.

கூட்டணி பொருத்தவரை இன்னும் 8 மாத காலங்கள் இருக்கிறது. 8 மாத காலத்தில் இன்னும் பல கட்சிகள் அதிமுக, பாஜக கூட்டணியில் சேர்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்