கழித்து வைக்கப்பட்ட வாகனங்கள் ஏலம் - சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
எழும்பூரில் கழித்து வைக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.;
சென்னை,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், சென்னை – 08, அலுவலக வளாகம், எழும்பூர் சென்னை – 08 இல் உள்ள கழித்து வைக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. இவ்வேலம் 03 செப்டம்பர் 2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
விதிமுறைகள் :
1. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ரூ.500/- (திருப்பிச் செலுத்தப்படும் ) எச்சரிக்கைத் தொகையை ஏலம் தொடங்குவதற்கு முன் செலுத்த வேண்டும்.
2. ஏலம் வாரியத்தின் விதிமுறைகளுக்கு இணங்க நடைபெறும்.
3. வாரியத்தின் முடிவு இறுதியானதாகும்.
4. ஏலத்தில் பங்கேற்பவர்கள் தங்கள் அடையாள ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள : 9498189753 / 9789035725
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.