தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்
திருச்சிக்கு முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை,
சுதந்திர தினத்தன்று பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06161) ஆக்ஸ்ட் 14 (இன்று) இரவு 11.10 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும்
மறுமார்க்கத்தில், திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06162) ஆகஸ்ட் 17 அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.