குருவாயூர்-சென்னை எழும்பூர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம்

குருவாயூர்-சென்னை எழும்பூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-01 00:08 IST

கோப்புப்படம்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் வருகிற 5, 9, 18, 23, 25, 30 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில், விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676) வருகிற 20-ந் தேதி 1 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற 4, 6, 8, 10, 12, 15, 17, 19 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில் எர்ணாகுளம், சேர்த்தலை ஆலப்புழா, ரெயில் நிலையங்களில் நிற்காது.

இதே ரெயில், வருகிற 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்கால், திருச்சி வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ரெயில் நிலையங்களில் நிற்காது. கூடுதலாக, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ரெயில் நிலைங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்