மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
போத்தனூர் ரெயில் நிலையத்தில், தண்டவாளம் புதுப்பித்தல் பணி நடைபெற உள்ளன.;
திருப்பூர்,
போத்தனூர் ரெயில் நிலையத்தில், தண்டவாளம் புதுப்பித்தல் பணி நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16722) மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு வருகிற 25 மற்றும் 27-ந்தேதிகளில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
அந்த நாட்களில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இயக்கப்படாது. இந்த தகவலை, சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.