ராகுல்காந்தி நாளை குஜராத் பயணம்

குஜராத் மாநில புதிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.;

Update:2025-07-25 19:24 IST

அகமதாபாத்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாளை குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார். வதோரா மாவட்டத்தில் காலை 10 மணிக்கு நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பிறகு குஜராத் மாநில புதிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி சுமார் 4 மணி நேரம் இருந்து காங்கிரஸ் தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் ஆட்சியை பிடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2027-ம் ஆண்டு குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் காங்கிரஸ் 17 இடங்களை வென்றது. ஆனால் 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த பிறகு, அவையில் கட்சியின் பலம் 12 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்