அரியானா: விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சி.ஆர்.பி.எப். வீரர் சுட்டுக்கொலை

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சி.ஆர்.பி.எப். வீரர் கிருஷ்ணனை சுட்டுக்கொன்றனர்.;

Update:2025-07-28 16:28 IST

சண்டிகர்,

அரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 30). சி.ஆர்.பி.எப். வீரரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் விடுமுறையில் தனது குடும்பத்தினரை பார்க்க சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சி.ஆர்.பி.எப். வீரர் கிருஷ்ணனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை செய்துவிட்டு இருவரும் பைக்கில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அண்மையில் கன்வார் யாத்திரையின்போது இளைஞர்கள் சிலருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர்களுக்கு இந்த கொலையில் சம்பந்தம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்