'தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது' - சுப்ரீம் கோர்ட்டு

குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.;

Update:2025-07-28 14:59 IST

புதுடெல்லி,

நாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் மிகவும் அச்சுறுத்தக்கூடியது என்றும் மிகவும் ஆபத்தானது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நாளும், டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும் இந்த கொடூரமான நோய்க்கு இரையாகி வருகின்றனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பு, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்