வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆகஸ்ட் 11 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

அபிஷேகம் செய்வதற்கான தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் கொண்டு வர அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-28 15:44 IST

Image Courtesy : PTI

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரை அருகே பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. வாரணாசியில் ஓடும் கங்கை நதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. காசி யாத்திரை மேற்கொள்வது பாவங்களை நீக்கி, புண்ணியத்தையும், மோட்சத்தையும் தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில், இந்த புனித தளத்தை தூய்மையாகவும், பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்கும் முயற்சியாகவும், காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி முதல் காசி விஸ்வநாதர் கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை கொண்டு வர அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், கோவிலின் புனிதத்தன்மை, தூய்மை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலை பராமரிக்க பக்தர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வபூஷன் மிஸ்ரா கூறுகையில், "காசி விஸ்வநாதர் கோவில் ஒரு ஆன்மீக தளமாக மட்டுமின்றி, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ வேண்டும். இந்த புனித தளத்தை மாசுபாடு இல்லாத இடமாக மாற்றவும், எதிர்கால சந்ததியினருக்காக இதை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சி இது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்