திருச்சானூர் பகுதி கோவில்களில் ஆகஸ்டு மாதம் நடக்கும் விழாக்கள்
ஆகஸ்ட் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு உற்சவர் பத்மாவதி தாயார் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.;
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பத்மாவதி தாயார் கோவில்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1, 15, 22 மற்றும் 29-ந்தேதிகளில் மாலை 6 மணியளவில் உற்சவர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 8-ந்தேதி காலை 10 மணிக்கு வரலட்சுமி விரதம், மாலை 6 மணிக்கு தங்கத்தேரோட்டம் நடக்கிறது.
சுந்தரராஜசாமி கோவிலில் 13-ந்தேதி உத்தராபாத்ரா நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு உற்சவர் பத்மாவதி தாயார் திருச்சி வாகனத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பலராம கிருஷ்ணசாமி கோவில்
பலராம கிருஷ்ணசாமி கோவிலில் ஆகஸ்டு 16-ந்தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 17-ந்தேதி உறியடி உற்சவம் மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது.
சூரியநாராயணர் கோவிலில் ஆகஸ்டு 26-ந்தேதி ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு பத்மாவதி தாயார் கோவிலின் நான்குமாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
சீனிவாசர் கோவில்
சீனிவாசர் கோவிலில் ஆகஸ்டு 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் வெங்கடேஸ்வரசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் ஆகஸ்டு 1, 8, 15, 22, 29-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு வஸ்திர அலங்கார சேவை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.
3, 10, 17, 24, 31-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.15 மணிக்கு பிரசன்ன ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், 5-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டதல பாதபத்மாராதன சேவை, 9-ந்தேதி சிரவண நட்சத்திரத்தையொட்டி காலை 10.30 மணிக்கு கல்யாணோற்சவம், 13-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டோத்தர சத கலசாபிஷேகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.