ஆடிப்பூரம்: 50 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம்
வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த ரகுபதி கிருஷ்ண கொண்டம்மாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 50 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் செய்திருந்தனர்.