இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு தக்க பதிலடி; ராணுவ தளபதி எச்சரிக்கை

கார்கில் வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.;

Update:2025-07-26 12:41 IST

ஸ்ரீநகர்,

1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கார்கிலில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் நினைவு தூணில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய ராணுவ தளபதி, இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடிதான் ஆபரேஷன் சிந்தூர். இது பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும். நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, அரசு வழங்கிய அனுமதியை தொடர்ந்து இந்தியா தக்க சர்ஜிகல் பதிலடியை கொடுத்தது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, மக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்