மூதாட்டியை சாலையில் போட்டுச்சென்ற குடும்பம்.. மனதை நொறுக்கிய சோக காட்சி

மூதாட்டி மற்றும் அவரை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-25 19:46 IST

லக்னோ,

மூதாட்டி ஒருவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் சாலையோரம் போட்டு சென்ற கொடூரம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் நகரில் இ-ரிக்ஷாவில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண், மூதாட்டி ஒருவரை நள்ளிரவில் சாலையோரம் கிடத்திவிட்டு சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. மோசமான உடல்நிலையில் இருந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூதாட்டி மற்றும் அவரை போட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்