ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-07-26 14:59 IST

ஸ்ரீநகர்.

ஜம்மு-காஷ்மீரின் உள்ள தோடா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.30 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.00 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்