உத்திரபிரதேசத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி

இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-07-26 16:00 IST

லக்னோ,

உத்தரபிரதேசம் மாநிலத்தில் நகுவாட் காவல் நிலைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு சாலை ஓரம் டிராக்டர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஹர்விந்தர் என்கிற ரிங்கு (35), பிருத்வி (50), மற்றும் மோதிராம் (52) ஆகியோர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே சமயம் சர்சாவா காவல் நிலைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியில் உத்தரகண்ட்-பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் இரண்டாவது விபத்து நிகழ்ந்தது, அங்கு ஒரு கார் மற்றும் லாரி மோதியதில் கணவன், மனைவி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பவன் குமார் (30), அவரது மனைவி ருக்மணி (29) மற்றும் ஹரிநாராயண் (55) என அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் இரு வெவ்வேறு சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்