திருச்செந்தூர் சரவண பொய்கை 50 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி
பக்தர்கள் பார்க்கும் வகையில் கோவில் யானைக்கு தனி குடில் அமைக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் சரவண பொய்கை 50 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. சரவண பொய்கையை சீரமைக்கும் பணி கடந்த வருடம் தொடங்கியது. தற்போது சாமி சிற்பங்கள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் பார்க்கும் வகையில், கோவில் யானைக்கு தனி குடில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரு சில வாரங்களில் இதனை பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.