ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா தொடங்கியது

கொடியேற்ற விழாவில் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-07-20 17:16 IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா இன்று தொடங்கியது.

இன்று காலை 6.00 மணி அளவில் ஆண்டாள் ரெக்கமன்னாருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன்பின்னர் கருடக்கொடி மாட வீதிகள் வழியாக வலம் வந்து பின்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 7.50 மணி அளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பத்தலில் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து இரவு 11 மணி அளவில் 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள் ரங்க மன்னார் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர்.

24ஆம் தேதி கருட சேவையும், 26ஆம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 28ஆம் தேதி ஆடிப்பூர நாளில் காலை 9.05 மணிக்கு தேரோட்டம் விமரிசையாக நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு சுகாதார வசதி, குடிநீர் வசதியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்