திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-07-20 21:55 IST

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில், இன்று வார விடுமுறை என்பதால் திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அண்ணாமலையாரையும், பராசக்தி அம்மனையும் வழிபட்டுச் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்