ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 91 லட்சம் வருவாய்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது;
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது.
இந்நிலையில், அரங்கநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் தோறும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுகின்றன.
இந்நிலையில், அரங்கநாத சுவாமி கோவிலில் ஜூலை மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் நேற்று எண்ணப்பட்டன. அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள் உள்பட பலர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 91 லட்சத்து 13 ஆயிரத்து 242 ரூபாய் பணம், 79 கிராம் தங்கம், 1 கிலோ 145 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 353 எண்ணிக்கைகள் உண்டியல் காணிக்கை வருவாய் ஆக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.