வனபத்ரகாளி அம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
யாக சாலையில் நவதானியங்கள், பழங்கள், காய்ந்த மிளகாய் உள்ளிட்டவைகள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.;
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல்சிறுவள்ளூர் கால்வாய் அருகே ஸ்ரீ வன பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வன பத்ரகாளி அம்மன் 27 அடி உயரத்தில் பிரமாண்டமாக எழுந்தருளியிருக்கிறாள். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு மிளகாய் யாகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் நவதானியங்கள், பழங்கள், காய்ந்த மிளகாய் உள்ளிட்டவைகள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.