கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
செடல் உற்சவத்தில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளை செடலில் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கிராமத்தில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி ஆடி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இன்று ஒன்பதாம் நாள் நிகழ்வில் செடல் உற்சவம் நடைபெற்றது. கோவில் முன்பு காத்தவராயன் சுவாமி நிறுத்தப்பட்டு, பின்பு காத்தவராயன் வேடமணிந்தவர் குழந்தைகளை செடலில் வைத்து, பக்தர்கள் சார்பில் நேர்த்திக் கடன் செலுத்தினார்.
செடல் திருவிழாவில் கோடிக்கரை, கோடியக்காடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளை செடலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.