முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

பக்தர்கள் பறவை காவடி, வேல் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update:2025-08-08 15:50 IST

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான பூக்குழி திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் (தீ மிதித்தல்) நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் பறவை காவடி, வேல் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். இதையடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இவ்விழாவில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி ஆகிய பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்